கரூர் தான்தோன்றி மலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை (CPS) இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்திட வேண்டும்,
சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை வழங்கிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் ஆகியோருக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவேண்டும்,
தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
