ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
இதையடுத்து கடந்த 11ம் தேதி துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவை சந்தித்த உமர் அப்துல்லா. அப்போது தனது கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதம் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா இன்று(புதன்கிழமை) காலை 11.30 மணியளவில் பதவியேற்றார். அவருக்கு துணை நிலை கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
தேசிய மாநாடு கட்சியின் உமர் அப்துல்லா 2வது முறையாக அம்மாநில முதல்வராக பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.துணை முதல்வராக ஜம்மு பகுதியை சேர்ந்த சுரிந்தர் சவுத்ரி பதவி யேற்றுக் கொண்டார்.
இந்த பதவியேற்வு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், திமுக சார்பில் கனிமொழி எம்பி கலந்து கொண்டனர்.