லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றியது. 3வது முறையாக மோடி பிரதமரானார். புதிய லோக்சபா சபாநாயகர் பதவிக்கு ஆளும் பா.ஜ. கூட்டணி சார்பில் ஓம்பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ்(கேரளா) என்பவரும் போட்டியிடுகிறாா்கள். இவர்கள் சார்பில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அதைத்தொடர்ந்து ஓம் பிர்லாவை சபாநாயகராக தேர்வு செய்யும் தீர்மானத்தை பிரதமர் மோடி முன் மொழிந்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா,சவுகான், மாஞ்சி உள்ளிட்ட அமைச்சர்கள், கூட்டணி கட்சித்தலைவர்கள் ஓம் பிர்லாவை முன்மொழிந்தனர்.
அதைத்தொடர்ந்து காங்கி்ரஸ் வேட்பாளர் கொடிக்குன்னில் சுரேசை காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் முன்மொழிந்தும், கனிமொழி, சுப்ரியா சுலே, அரவிந்த், வழிமொழிந்தும் பேசினர். அதைத்தொடர்ந்து இடைக்கால சபாநாயகர் வாக்கெடுப்புக்கு உத்தரவிட்டார். பின்னர் வாக்கெடுப்பு நடத்தினர். குரல் வாக்கெடுப்பு நடந்தது. அதைத்தொடர்ந்து ஓம்பிர்லா தேர்வு செய்யப்பட்டதாக இடைக்கால சபாநாயகர் அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம்பிர்லாவை பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பிரதமர் மோடி, எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் ஆகியோர் அவரது ஆசனத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது மோடியும், ராகுலும் சம்பிரதாயமாக கைகுலுக்கி கொண்டனர். சபாநாயகரின் ஆசனத்திற்கு வந்ததும், இடைக்கால சபாநாயகர் எழுந்து, புதிய சபாநாயகரை ஆசனத்தில் அமர வைத்தார். பின்னர் சபாநாயகர் பிரதமர் மோடி, கிரண் ரிஜிஜூக்கு கை கொடுத்தார்.ராகுல் சபாநாயகருக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து சபாநாயகரை வாழ்த்தி மோடி, எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் ஆகியோர் பேசினர். கடந்த 25 ஆண்டு மக்களவை வரலாற்றில் 2வது முறையாக சபாநாயகர் பதவியை பெற்றவர் ஓம்பிர்லா என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் காங்கிரஸ் ஆட்சியில் 1985, 1989ம் ஆண்டுகளில் பல்ராம் ஜாக்கர் தொடர்ந்து 2 முறை சபாநாயகர் பதவி வகித்துள்ளார்.மக்களவையில் இதற்கு முன்1952, 1967,1976 ஆகிய மூன்று முறை சபாநாயகர் தேர்தல் நடந்துள்ளது. 48ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் சபாநாயகர் தேர்தல் நடந்துள்ளது.