பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் பிரிவில் கலந்து கொள்ள திருச்சி வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இது குறித்து பிரித்வி ராஜ் கூறியதாவது:
ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்பது தான் கனவு. அதுபோலத்தான் எனக்கும். இதற்காக 4 ஆண்டுகளாக தீவிரமாக பயிற்சி பெற்றேன். இப்போது ஒலிம்பிக்கில் பங்கேற்றும் வாய்ப்பு கிடைத்ததுள்ளது . இப்போது தான் முதன் முதலாக ஒலிம்பிக் செல்ல இருக்கிறேன். ஏற்கனவே ஆசிய போட்டி, உலக கோப்பை போட்டியில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளேன.
எனது தந்தை ஏற்கனவே துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். நானும் சிறு வயது முதல் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்று வந்தேன். சுமார் 15 வருடமாக பயிற்சி பெற்று வந்தேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.