திருச்சி அடுத்த முத்தரசநல்லூரை சேர்ந்த மூதாட்டி ராதா. இவருக்கு 60 வயது இருக்கும். வீட்டில் தனியா இருந்த ராதாவை யாரோ மர்ம நபர்கள் வீடு புகுந்து கொலை செய்து விட்டு, அவர் அணிந்திருந்த நகைகளை திருடிச்சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
