தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் 23 வது அமைப்பு தினம் தஞ்சையில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் குமாரவேலு தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் இராசரத்தினம் ராஜன் கருணாகரன் இணை செயலாளர்கள் கோவிந்தன் குணசேகரன் சத்தியசீலன் தணிக்கையாக கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அமுதன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர் நலச்சங்க மாவட்ட தலைவர் பத்மநாதன் ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர் கழக மாநில இணை செயலாளர் ராமசாமி ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் நலச்சங்கம் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநில செயற்குழு உறுப்பினர் சோம லிங்கம் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக சங்கத்தின் கொடியை மாவட்ட தலைவர் குமார் வேலு ஏற்றினார். 80 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களை பாராட்டி சால்வை அனுபவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் . ஓய்வு பெற்ற வருவாய் கிராம ஊழியர்கள் , சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஓய்வூதியர்களின் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 2 லட்சம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கிழக்கு வட்ட தலைவர் மாரியப்பன், வட்ட செயலாளர்கள் கருணாநிதி, மேற்கு ஆறுமுகம், பூதலூர் வட்ட அமைப்பாளர்கள் வின்சென்ட், பழனிசாமி , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில துணைத் தலைவர் நடராஜன் மாவட்ட பொருளாளர் முத்து சேவை ஆகியோர் நன்றி கூறினர்.