அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி அரசு மேல்நிலை பள்ளியில் 1999 -2000 ஆண்டில் +2 படித்த முன்னாள் மாணவர்களின் வெள்ளிவிழா ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது , அதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ – மாணவிகள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
2000 ஆண்டில் +2 படித்த மாணவ – மாணவிகளில் 7 மருத்துவர்கள் , 5 கால்நடை மருத்துவர்கள் , 1 பல் மருத்துவர் , சுமார் 50க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் , 15 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் , 5 பேர் அரசின் உயர்பதவிகளில் இருக்கிறார்கள், ராணுவம் , சுயதொழில் மற்றும் பல்வேறு தனியார் துறைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
வெள்ளிவிழா ஆண்டில் தங்கள் குடும்பத்தினருக்கு , தங்களுக்கு பயிற்றுவித்த ஆசியர்களையும் , பள்ளியையும் அறிமுகப்படுத்தி மகிழ்ந்தனர். தாங்கள் படித்த பள்ளி அறைகளில் குடும்பத்தினருடன் அமர்ந்து தங்களது பள்ளி பருவ நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
சிலர் 24 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சந்தித்து நெகிழ்ச்சியான தருணமாக இருந்தது.
ஆசிரி யர்களும் தங்கள் முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் பேசி மகிழ்ந்தனர்.