சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல் அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசின் நிலை என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். இது தொடர்பாக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் கருத்து கேட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.