தேனி மாவட்டம், லட்சுமி நாயக்கன்பட்டி தேவாரம் பகுதியை சேர்ந்தவர் காளையன் இவரது மனைவி மணியம்மாள்(80) இவர்களது மகள் மகேஸ்வரி தஞ்சை மாவட்டம் சுண்ணாம்பு கார தெருவில் உள்ள மாதவன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்தநிலையில் நேற்று மகள் வீட்டுக்கு மருமகன் மதவனுடன் காளையன் மணியம்மாள் ஆகியோர் தேனியில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்துள்ளனர்.
அப்படி வந்தவர்கள் தஞ்சை பேருந்தில் மணியம்மாள் ஏறிய நிலையில் காளையனை மாதவன் பேருந்தில் ஏற்றுவதற்கு முன்பாக பேருந்து ஓட்டுநர் பேருந்தை எடுத்து சென்று விட்டார். இந்த நிலையில் மாதவன் காளையனை வைத்துக்கொண்டு மணியம்மாலை எப்படி தேடுவது என தெரியாமல் அவர் தஞ்சைக்கு காளையனை அழைத்து கொண்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் தஞ்சை பேருந்தில் ஏறி வந்த மணியம்மாள் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளார். அப்படி திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய மணியம்மாள் வழி தெரியாமல் தங்க அணிகலன்கள் அணிந்த நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இதனை பார்த்த சமூக ஆர்வலர் ஒருவர் அவரை துவாக்குடி செல்லும் மாநகர அரசு பேருந்தில் ஏற்றி வந்து துவாக்குடி காவல் நிலையத்தில் விட்டு சென்றுள்ளார்.
அதன் அடிப்படை யில் மணியம்மாளிடம் துவாக்குடி போலீசார் விசாரணை செய்த பொழுது தனது பெயர் மணியம்மாள் என்றும் தேனியை சேர்ந்தவர் என்றும் தஞ்சையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக தனது கணவர் மற்றும் மருமகன் ஆகியோருடன் தேனியில் இருந்து வந்ததாகவும் பின்னர் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பஸ்ஸில் வந்த பொழுது அவர்கள் வராமல் போனதால் திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் பஸ்ஸை விட்டு இறங்கியதாகவும் எங்கு செல்வது என்று வழி தெரியாமல் நின்றப் போதுதான் ஒருவர் தன்னை துவாக்குடி காவல் நிலையம் அழைத்து வந்ததாக கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் திருச்சி மாவட்ட போலீசாரின் துணையுடன் தேனி மாவட்ட போலீசார் தொடர்பு கொண்டு மணியம்மாள் கூறிய விலாசத்தைகூறி மணியம்மாள் வழி தவறி இங்கு வந்துள்ளார் என்றும் அவர்கள் உறவினர்களை தொடர்பு கொள்ள வேண்டும் என துவாக்குடி போலீசார் தேனி மாவட்ட போலீசாரை கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் தேனி மாவட்ட போலீசார் உடனடியாக மணியம்மாளின் ஊருக்கு சென்று விசாரணை செய்ததோடு பின்னர் மணியம்மாளின் மருமகன் மாதவனின் செல்போன் என்னை கொடுத்துள்ளனர்.
அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் மதாவனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் மாதவன் துவாக்குடி காவல் நிலையத்திற்கு விரைந்து வந்து மாமியார் மணியம்மாளை மீட்டு பத்திரமாக வைத்து இருந்த துவாக்குடி போலீசாருக்கு நன்றி கூறி தஞ்சையில் உள்ள தனது வீட்டிற்கு மணிய மாலை மாதவன் அழைத்துச் சென்றார்.