கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் அமைந்துள்ள கட்ட முகமது தெரு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது அப்பகுதியில் சிராஜுதீன் என்பவருக்கு சொந்தமான சுமார் 150 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடம் சேதமடைந்து உள்ளது. பள்ளப்பட்டி பகுதியில் மழையின் காரணமாக சேதம் அடைந்த கட்டிடம் இன்று திடீரென்று இடிந்து விழுந்துள்ளது. அந்த வழியாக யாரும் செல்லாதாலும் வீட்டில் யாரும் குடி இல்லாததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்து அடிப்படையில் விரைந்து வந்த நகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து உள்ளனர்.
கரூர் அருகே இடிந்து விழுந்த கட்டிடம்….பெரும் விபத்து தவிர்ப்பு….
- by Authour
