திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றி கழக மாவட்ட இளைஞரணி சாந்தகுமார் இன்று நடைபெற்ற திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்தார்.
அந்த மனுவில் திருப்பத்தூர் அடுத்த சாலை நகரில் உள்ள தனியார் TOYOTA கார் கம்பெனியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் ஆயில் என அனைத்தும் வெளியேறி பால்நாங்குப்பம் மற்றும் அண்ணாண்டப்பட்டி ஏரிகளில் கலந்து துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் நோய்
தொற்று அபாயம் ஏற்படுகிறது. எனவே சம்பத்தப்பட்ட கம்பனியின் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலும் ஏரியை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.