Skip to content
Home » திருச்சியில் ரூ.12,000 லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளர் கைது…

திருச்சியில் ரூ.12,000 லஞ்சம் வாங்கிய மின் கணக்கீட்டாளர் கைது…

  • by Authour

திருச்சி கே.கே. நகரை சேர்ந்த பெரியநாயகம் மகன் சந்தோஷ். இவரது அப்பா பெயரில் உறையூர் சவேரியார் கோவில் தெருவில் சொந்தமாக வீடு உள்ளது. அந்த வீட்டை மருத்துவமனை நடத்துவதற்கு வாடகைக்கு விட்டுள்ளார். அதன் காரணமாக தனது வீட்டின் மின் இணைப்பினை வணிக மின் இணைப்பாக மாற்றுவதற்கு தென்னூர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு உறையூர் பகுதிக்குரிய கணக்கீட்டாளர் ஜெயச்சந்திரன், உங்களுடைய வீட்டை கமர்சியலுக்கு வாடகைக்கு விட்டுள்ளீர்கள். நான் ரிப்போர்ட் எழுதி உங்களுக்கு அபராதம் விதித்தால் 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அபராதம் வரும். அது வராமல் செய்ய வேண்டும் என்றால் ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் செய்து கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார். பின்னர் ரூ.12ஆயிரமாக குறைத்தார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்தோஷ் திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில், சந்தோஷ் இன்று தென்னூர் மின்வாரிய அலுவலகத்தில் ஜெயசந்திரனிடம் ரூ.12,000ஐ கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜெயச்சந்திரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *