திருச்சி திருவெறும்பூர் அருகே வடக்கு காட்டூர் பிரியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர் உத்தமர் கோவில் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையத்துக்கு ஒரு அரசு டவுன் பேருந்தில் ஏறிச் சென்றார். அப்போது தனது கைப்பையில் ஒரு பவுன் செயின் ஒன்றை வைத்திருந்தார்.
பஸ்சில் கூட்டமாக இருந்ததை பயன்படுத்தி மர்ம நபர்கள் அவரது கைப்பையை திறந்து அதில் இருந்த ஒரு பவுன் நகையை திருடிவிட்டனர்.இது குறித்து விஜயலட்சுமி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.