ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும்,ஒரு சரக்கு ரயிலும் விபத்துக்குள்ளான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரசில் தமிழகத்தை சேர்ந்த பயணிகளும் பயணித்து வந்த
நிலையில் இதுவரை எத்தனை பேர் உயிரிழந்தனர் எவ்வளவு பேருக்கு காயம் என்கிற முழுமையான விவரங்கள் வெளி வரவில்லை.
இந்நிலையில் இந்த கோர விபத்தில் உயிரிழந்த நபர்களுக்கு திருச்சி பொன்மலையடிவாரம் பகுதியில் மக்கள் சக்தி இயக்கம்,தண்ணீர் அமைப்பு உள்ளிட்ட ஒன்று சேர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி
அஞ்சலி செலுத்தினர்.
ஒடிசா பாலசோரில் விபத்து நடந்த இடத்தின் புகைப்படத்தை கையில் ஏந்திய அவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர்.