Skip to content

திருச்சியில் அக்.7ம் தேதி திமுக மகளிர் தொண்டரணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்…

  • by Authour

தி.மு.க மகளிரணி, மகளிர் தொண்டரணி புதிய மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் 07-10-2023 அன்று (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கழக துணை பொது செயலாளர் திருமிகு. கனிமொழி கருணாநிதி M.P தலைமையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் கழக முதன்மை செயலாளர் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல்துறை அமைச்சர் திரு. K.N. நேரு அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். மாண்புமிகு பள்ளி கல்விதுறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர்துறை அமைச்சர் திருமிகு. கயல்விழி செல்வராஜ் அவர்கள் மற்றும் திரு. தியாகராஜன் MLA, திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் அவர்கள், திருச்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் திரு. வைரமணி அவர்கள், திருச்சி மாநகர வணக்கத்திற்குறிய மேயர், திருச்சி மேற்கு மாநகர செயலாளர் திரு. அன்பழகன், மு. மதிவாணன், மாநகர கழக செயலாளர் (கிழக்கு) மண்டலம் தலைவர் திருச்சி மாநகராட்சி அவர்கள் அனைவரின் முன்னிலையில் கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்து மாநில நிர்வாகிகள், மகளிரணி, மகளிர் தொண்டரணி, பிரச்சாரகுழு, வலைதளகுழு, ஆலோசனை குழு உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியில் முரசொலியில் அறிவித்த புதிய மாவட்ட நிர்வாகிகள், அனைவரும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம் என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *