நடிகர் கார்த்தி-இயக்குனர் ராஜு முருகன் கூட்டணியில் ‘ஜப்பான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உடன் ராஜு முருகன் கைகோர்த்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. ‘ஜப்பான்’ திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25வது படம் என்பதால் மிக அதிக பொருட் செலவில் படம் தயாராகி வருகிறது. அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடிக்க தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில், ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 28-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில், நடிகர்கள் சிவகுமார், சூர்யா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்