திருச்சி பொன் நகர் காம காமராஜபுரம் பகுதியில் அரசு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்பை மீட்டு அங்கு மாநகராட்சி சார்பில் சமுதாயக்கூடம் கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி திருச்சி – திண்டுக்கல் சாலையில் வி.வி. தியேட்டர் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது சாலையின் இரு பக்கங்களிலும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இது பற்றிய தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட் போலீசார் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீசார் போராட்டக்காரர்கடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தபோதிலும் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து.
கண்டன கோஷத்தை தொடர்ந்தனர்.
அதன் பின்னர் மாநகராட்சி பேச்சுவார்த்தை நடத்தினர் இதனை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.