Skip to content
Home » கரூரில் பெண் கிராம நிர்வாக உதவியாளருக்கு ஆபாச SMS…. கொலை மிரட்டல்… தொழிலாளி கைது…

கரூரில் பெண் கிராம நிர்வாக உதவியாளருக்கு ஆபாச SMS…. கொலை மிரட்டல்… தொழிலாளி கைது…

கரூர் மாவட்டம் புன்செய் புகளூர் ( வடக்கு )கிராம நிர்வாக அலுவலரின் கிராம உதவியாளராக பணியாற்றி வருபவர் தனலட்சுமி( 42) .இவர் பணியில் இருந்தபோது புன்செய் புகளூர் அருகே கட்சியப்பன் நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் (47 )என்பவர் கிராம உதவியாளர் தனலட்சுமியின் செல்போன் வாட்ஸ் அப்பிற்கு ஆபாச குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.

இந்நிலையில் தனலட்சுமி பணியின் காரணமாக புகளூர் காகித ஆலை ரயில்வே கேட் அருகே தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த சேகர் என்பவரை பார்த்து ஏன் இவ்வாறு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது . இதில் ஆத்திரம் அடைந்த சேகர் பொது வெளியில் பெண் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் திட்டி உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தனலட்சுமி வேலாயுதம் பாளையம் போலீசில் புகாரின் பேரில் போலீசார் பெண் கிராம உதவியாளருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி கொலை மிரட்டல் விடுத்ததாக சேகர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.