Skip to content
Home » நம்பர் பிளேட் இல்லாமல் வரும் டூவீலர்களுக்கு அபராதம்…. போலீசார் எச்சரிக்கை….

நம்பர் பிளேட் இல்லாமல் வரும் டூவீலர்களுக்கு அபராதம்…. போலீசார் எச்சரிக்கை….

  • by Senthil

புதிய நம்பர் பிளேட் விதி முறையின்படி வாகன நம்பர் பிளேட்டை வடிவமைக்காவிட்டால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபகாலமாக பெரும்பாலான வாகனகங்ளில் குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் மோட்டார் வாகன விதிகளுக்கு புறம்பாக உள்ளது. இந்த பிழையான நம்பர் பிளேட்டுகள் கொண்ட வாகனங்கள் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும்போதும், விபத்துக்கள் ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்லும் பொழுதும் அவற்றின் பதிவு எண்களை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளது.

ஆகையால் தற்போது தஞ்சை மாநகரில் போக்குவரத்து போலீசார் நம்பர் பிளேட் விவகாரத்தில் தீவிரம் காட்ட

தொடங்கி உள்ளனர். தஞ்சை அண்ணாசிலை முன்பு, ரகுமான் நகர், புதிய பஸ் நிலையம், ராஜராஜசோழன் சிலை பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக எந்த வண்டியில் நம்பர் பிளேட் சரி இல்லாமல் வந்த வண்டிக்கு ரூ.300 அபராதம் விதித்தனர். மேலும் அருகில் உள்ள ஸ்டிக்கர் கடைக்கு சென்று நம்பர் பிளேட்டை அரசு நிர்ணயித்துள்ளபடி மாற்றி வடிவமைத்து மீண்டும் வாகனத்தை கொண்டு வந்து காண்பித்து அதை போக்குவரத்து போலீசார் புகைப்படம் எடுத்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

இதனால் வாகனஓட்டுனர்களும் நம்பர் பிளேட்டை மாற்றி, அபராத தொகையை செலுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதுகுறித்து போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.ஜி.ரவிச்சந்திரன் கூறுகையில்… கடந்த 3 நாட்களாக போக்குவரத்து விதிகளை கடுமையாக அமல்படுத்ததி வாகன சோதனைகளை நடத்தி வருகிறோம். ஹெல்மேட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நம்பர் பிளேட் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பதுடன் புதிநாக நம்பர் பிளேட் மாற்றி வரும்படி அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!