சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இதனால் அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசில்வுட் 2வது இடத்திலும் , நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் 3வது இடத்திலும் உள்ளனர். மேலும் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 9வது இடத்தில் உள்ளார்.