Skip to content
Home » 28ம் தேதி என்டிஆர் நூற்றாண்டு விழா…..நடிகர் ரஜினி பங்கேற்கிறார்

28ம் தேதி என்டிஆர் நூற்றாண்டு விழா…..நடிகர் ரஜினி பங்கேற்கிறார்

தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நாயகனாகவும், திரையுலகில் சாதனையாளராகவும் இருந்தவர் என்.டி.ராமாராவ். இவர் தமிழக முதல்- அமைச்சர்களாக இருந்த எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோருக்கும் நெருங்கிய நண்பராக இருந்தவர். இவருடைய நூற்றாண்டு விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடத்திட்டமிட்டுள்ள னர். இதற்கான ஏற்பாடுகளை அவரது மகன் நடிகர் பால கிருஷ்ணா செய்து வருகிறார். 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள என்.டி.ஆர். மூன்று முறை தேசிய விருதுகளைப் பெற்றதோடு, தயாரிப்பாளராகவும் சினிமா இயக்குனராகவும் புகழ் பெற்று விளங்கினார்.

1982-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த என்.டி.ஆர்., 1983 முதல் 1989 வரையிலும் பின்னர் 1994 முதல் 1995 வரையிலும் ஒருங்கிணைந்த ஆந்திர மாநில முதல்-மந்திரியாக செயல்பட்டார். 1984 ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலின் போது முன்னாள் முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக என்.டி.ஆர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். என்.டி.ஆரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார்.

இது பற்றி பாலகிருஷ்ணா வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது, வரும் 28-ந் தேதியன்று விஜயவாடாவில் மறைந்த என்.டி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார். ஆந்திராவின் முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருடன், நானும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். என்.டி.ஆரின் கலை மற்றும் அரசி யலுக்கான பங்களிப்பைப் போற்றும் வகையில், அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!