நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சி டிஐஜி வருண்குமார் குறித்து சமூகவலைதளங்களில் தரக்குறைவான விமர்சனங்களை வைத்ததாக டிஐஜி வருண்குமார் திருச்சி கோா்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு திருச்சி ஜேஎம்4 கோர்ட்டில் நடந்து வருகிறது. இன்று வருண்குமார், சீமான் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் சீமான் இன்று ஆஜராகவில்லை.
இந்த வழக்கு இன்று காலையில் விசாரணைக்கு வந்தபோது அவர் மாலைக்குள் ஆஜராகவேண்டும் என நீதிபதி கூறிஇருந்தார். ஆனாலும் சீமான் இன்று ஆஜராகவில்லை. எனவே நாளை கண்டிப்பாக சீமான் ஆஜராகவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வழக்கை நாளைக்கு தள்ளிவைத்தார்.