Skip to content

இது என் கட்சி என கூறிய சீமான் நிர்வாகிகள் வெளியேற சொன்னதால் பரபரப்பு ..

  • by Authour

2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். இதையொட்டி பாளை. நீதிமன்றம் எதிரே ஒரு திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டம் துவங்குவதற்கு முன்பாக பங்கேற்க வந்த நிர்வாகிகள், தொண்டர்களின் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து கொடுக்குமாறு நிர்வாகிகள் சிலர் அவற்றை வாங்கி வைத்தனர். இதைதொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சீமான், வரும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து பேசினார். கட்சியின் நிர்வாகிகள் யாரும் பேச அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் நெல்லை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன் எழுந்து பேச முயற்சித்தார். அப்போது, ‘இது என் கட்சி, இங்கு நான் மட்டும்தான் பேசுவேன்’ எனக்கூறிய சீமான் அவரை நோக்கி, அதற்கு சீமான்,” ஜாதி ரீதியாக முகநுாலில் பதிவிட்டவன் தானே நீ உட்கார்; பேசாதே,” என்றார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், ‘பார்வீன் கடந்த சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் நல்லமுறையில் கட்சி பணியாற்றிவர். யாரோ ஒருவர் கூறியதை வைத்து அவரை திட்டுவது சரியல்ல. சாட்டை துரைமுருகன் கூட சாதிய ரீதியில் பேசி வருகிறார். அவரை நீங்கள் கண்டிக்கவில்லையே’ எனக் கூறியதை தொடர்ந்து, அந்தோணி விஜயையும் வெளியே செல்லுமாறு கூறிய சீமான் இது என் கட்சி என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிர்வாகிகள் வெளியேறிய போது அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைதொடர்ந்து கூட்டத்தை விட்டு மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வீன், நாங்குநேரி தொகுதி செயலாளர் அந்தோணி விஜய், அம்பை தொகுதி பொறுப்பாளர் சார்லஸ், ராதாபுரம் தொகுதி துணைத் தலைவர் சந்திரமோகன், பாளை. கிழக்கு ஒன்றிய செயலாளர் அரசகுமார் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் பாதியில் வெளியேறினர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!