நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திருச்சி எஸ்.பி. வருண்குமாரை குறிவைத்து தாக்கி வருகிறார்கள். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால் நாம் தமிழர் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை முக்கிய நிர்வாகி அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளார். தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா. சுபாதேவி அந்த கட்சிக்கு முழுக்கு போட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் வெளியேறுகிறேன்.
இதுவரை என் செயல்களை நேசித்த, விமர்சித்த அத்துனை சகோதர சகோதரிகளுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.