தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் தொடர்பு பணியாளர் திட்டம் மற்றும் வெங்கடேஸ்வரா கல்வி மற்றும் கிராம வளர்ச்சி அறக்கட்டளை சார்பில், காசநோய் பிரிவு துணை இயக்குநர் மருத்துவர் மாதவி அறிவுறுத்தலின்படி, மாவட்ட வள அலுவலர் கதிரேசன் வழிகாட்டுதலின்படியும், காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தஞ்சாவூர் மத்திய மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திராவிட கதிரவன், ஊராட்சி குழு உறுப்பினர் விஜி கதிரவன் ஆகியோர் காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு தொகுப்பு பொருட்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் தொண்டராம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ராஜராஜன், நம்பிக்கை மைய ஆலோசகர் அமுதவாணி, காசநோய் பிரிவு எஸ்டிஎஸ் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக தொடர்பு பணியாளர் ரமாமணி நன்றி கூறினார்.