Skip to content
Home » டாடா அறக்கட்டளையின் தலைவர்…….நோயல் டாடா

டாடா அறக்கட்டளையின் தலைவர்…….நோயல் டாடா

  • by Authour

டாடா ஸ்டீல்ஸ், டாடா பவர், டாடா மோட்ட்டர்ஸ், டாடா கெமிக்கல் என ஏகப்பட்ட நிறுவனங்கள் டாடா குழுமத்தில் இருக்க, டாடா அறக்கட்டளையின் தலைவராக ரத்தன் டாடா  இருந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து,  ரத்தன் டாடாவின் தம்பி நோயல் டாடா, அறக்கட்டளையின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

டாடா குழுமத்தில் பல அறக்கட்டளைகள் இருக்கின்றன. டாடா சன்ஸ் நிறுவனத்தின் குறிப்பிட்ட பங்குங்கள் இந்த அறக்கட்டளையுடையது… அந்தப் பங்குகளை வைத்து தான் இந்த அறக்கட்டளைகள் செயல்படுகின்றன. இதற்கு, சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளை, சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகிய இரண்டு அறக்கட்டளைகள் மட்டும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 52 சதவிகித பங்குகளை வைத்துள்ளது.

இதுவரை இந்த அறக்கட்டளைகளின் தலைவராக ரத்தன் டாடா இருந்தார். ‘தனக்கு பின் யார்?’ என்று அவர் யாரையும் குறிப்பிடாததால், தற்போது  டாடா அறக்கட்டளையின் 13 அறங்காவலர்கள்   சேர்ந்து நோயல் டாடாவை  தேர்வு செய்துள்ளனர். இவர்  ரத்தன் டாடாவின் சகோதரர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *