பெண் போலீசாரிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட புகார் தொடர்பாக, போக்குவரத்து காவல்துறை இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சூழலில், தமிழ்நாடு முழுவதும் பெண் போலீசாரை பணியில் அமர்த்துவது தொடர்பாக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
உள்துறை செயலரின் அறிவுறுத்தலின் பேரில், டிஜிபி சங்கர் ஜிவால், காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியில் அமர்த்த கூடாது. எஸ்பிக்களில் இருந்து ஐஜி வரையிலான காவல் அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு வாய்மொழி உத்தரவு அளித்துள்ளார்.
எஸ்.பி. முதல் ஐ.ஜி. வரையிலான காவல் அதிகாரிகள் அலுவலகம், முகாம் அலுவலகங்களில் பெண் போலீசாரை பணியமர்த்தக்கூடாது. காவல் அதிகாரிகள், அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பணியில் உள்ள பெண் போலீசாரை உடனே வேறு பணிக்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.