திருச்சி எஸ்.பி. சுஜித் குமார் இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
திருச்சி மாவட்டத்தில் உள்ள வெளி மாநிலங்கள் சேர்ந்த தொழிலாளர்கள் எத்தனை பேர் என்பது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் மொத்தம் 2784 ஆண் தொழிலாளர்களும் 406 பெண்களும் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சப்பூர் மற்றும் எஸ் ஆர் எம் பகுதிகளில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இவர்கள் அனைவரையும் நேரில் சென்று அவர்களோடு கலந்து பேசி அவர்களுடைய பிரச்சினைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
அவர்களுக்கு திருச்சியில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக கூறினார்கள். மேலும் அதிகாரிகள் மூலம் அவர்கள் தங்கி இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கூடுதலாக அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்ள மாவட்ட அளவில் தொடர்பு எண் கொடுக்கப்பட்டு அந்த எண்ணிற்கு அழைக்க அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என்னுடைய செல்போன் எண்ணிற்கு மூன்று பேர் தொடர்பு கொண்டு சமீபத்தில் வெளியான வீடியோ தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள், அவர்களுக்கு அது உண்மை இல்லை என விளக்கம் அளித்திருக்கிறேன். எனவே இது போன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.