இந்தியாவில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை இரண்டும் மழைப்பொழிவை தருகிறது. தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் செப்டம்பர் 10ம் தேதி வரை பெய்யும்
தென்மேற்கு பருவமழை தான் இந்தியாவின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழையை தருகிறது.
ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை மூலமே அதிக மழை கிடைக்கிறது. இந்த மழை கடந்த அக்டோபர் 15ம் தேதி தொடங்கியது. இன்றுடன் வடகிழக்கு பருவமழை விடை பெற்றுக்கொண்டது. சரியாக 104 நாள் இந்த மழை காலம் நீடித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.