டாக்டர் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, கரூர் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. டாக்டர் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு கரூர் மாநகராட்சிகளில் உள்ள 48 வார்டுகளில் பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு கரூர் மாநகராட்சி சார்பில் சிக்கன் பிரியாணி முட்டை உள்ளிட்ட அசைவ விருந்து பரிமாறப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் கவிதா துவக்கி வைத்தார்.
மாநகராட்சி ஆணையர் சுதா ,துணை மேயர் சரவணன், உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் நிகழ்ச்சி பங்கேற்று இருந்தனர்.
இந்த விருந்தில் 500ககும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உணவு அருந்தினர்.