ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 31ம் தேதி தொடங்கியது. 3ம் நாள் வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதுவரை மொத்தம் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா வேட்புமன தாக்கல் செய்தார். அவரையும் சேர்த்து மொத்தம் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாளை காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.