ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இதில் தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். அவர் இன்று மதியம் தேர்தல் அதிகாரி சிவக்குமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். நேற்று சுயேச்சைகள் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 2ம் நாளான இன்று ஆனந்த் உள்பட 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். எனவே 2 நாளில் 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
Tags:தேமுதிக வேட்புமனு