2023ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதுவரை இந்த ஆண்டிற்கான அமைதி, மருத்துவம், வேதியல் உள்ளிட்டா துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.