Skip to content
Home » வடிவேலு குறித்து பேசமாட்டேன்….. ஐகோர்ட்டில் சிங்கமுத்து உத்தரவாதம்

வடிவேலு குறித்து பேசமாட்டேன்….. ஐகோர்ட்டில் சிங்கமுத்து உத்தரவாதம்

  • by Authour

நடிகர் வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர் சிங்கமுத்து.   இருவருக்கும் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து சிங்கமுத்து வடிவேலு குறித்து  சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பியதாக, வடிவேலு  ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை குறித்து பேச தடை விதிப்பதுடன், சிங்கமுத்து தனக்கு  நஷ்ட ஈடாக ரூ.5 கோடி வழங்கவும் உத்தரவிடவேண்டும் என கோரி இருந்தார்.

கடந்த 6-ம் தேதி நடந்த விசாரணையில், இரு தரப்பில் இருந்தும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை 11-ம் தேதிக்கு(இன்று) தள்ளி வைத்தார். மேலும், அதுவரை சிங்கமுத்து, வடிவேலு குறித்து எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்க கூடாது என்றும், ஏற்கனவே சிங்கமுத்து கூறியது யூ-டியூபில் இருப்பதால் அதனை நீக்குமாறு அந்த சேனலுக்கு கடிதம் எழுதுமாறும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, நடிகர் சிங்கமுத்து தரப்பில் உத்தரவாத மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வடிவேலு குறித்து எந்த அவதூறு கருத்தும் தெரிவிக்கமாட்டேன் என்று தெரிவிக்கப்பட்டது.

அதுமட்டுமில்லாமல் கோர்ட்டில் நிலுவையில் உள்ள இந்த உரிமையியல் வழக்கின் விசாரணை முடியும் வரை வடிவேலு குறித்து வாய் மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ, டிஜிட்டல் முறையிலோ தவறான எந்த தகவலையும் தெரிக்க போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜனவரி 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *