Skip to content
Home » பொன்னியின் செல்வன்2 சிறப்பு காட்சி இல்லை…..தியேட்டர் அதிபர் சங்கம் அறிவிப்பு

பொன்னியின் செல்வன்2 சிறப்பு காட்சி இல்லை…..தியேட்டர் அதிபர் சங்கம் அறிவிப்பு

  • by Authour

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்-2’ திரைப்படம் நாளைய தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் 2-ம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, முதல் நாள் சிறப்பு காட்சிகளின் போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில், பொன்னியின் செல்வன்-2 படத்திற்கு நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்போவது இல்லை என ஒருமனதாக முடிவு செய்யப்படுள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நாளை காலை 9 மணிக்கு ‘பொன்னியின் செல்வன்-2’ படத்தின் முதல் காட்சி திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *