திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா இன்று திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:
நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மா நாட்டிற்காக பக்ரைன் சென்று இருந்தேன்.நடந்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன்.
இப்போது நான் எதையும் பேசுகின்ற மனநிலையில் இல்லை கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன் – அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை யாரிடமும் சென்று புகார் அளித்ததில்லை.
நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன் – தனி மனிதனை விட இயக்கம் கட்சி பெரியது என்று எண்ணுபவன் நான்.
இப்போது நடந்து இருக்கிற இந்த நிகழ்ச்சி மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது – நான் ஊரில் இல்லாத போது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர்.என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி எல்லாம் காயப்பட்டு உள்ளார்.
நான் பேசுவதற்கு நிறைய உள்ளது ஆனால் நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை.மன சோர்வில் உள்ளேன் – மனசு சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தவில்லை .
இவ்வாறு அவர் கூறினார்.