நடிகர் சுரேஷ் கோபி நேற்று இரவு மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். இந்த நி்லையில் இன்று காலை அவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக செய்தி்கள் வெளிவந்தன. இந்த நிலையில் பிற்பகல் 2.30 மணி அளவில் அந்த செய்திக்கு சரேஷ்கோபியிடம் இருந்து மறுப்பு வந்தது. நான் இணை மந்தி்யாக இருக்கிறேன். ராஜினாமா செய்யப்போவதாக வந்த செய்தி தவறு . பிரதமர் மோடி தலைமையில் கேரளாவின் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என உறுதி பூண்டு இருக்கிறேன் என சுரேஷ்கோபி கூறினார்.