Skip to content

இடமாற்றம் செய்யப்படாது…. திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கொண்டாட்டம்….

திருச்சி காந்தி மார்க்கெட் காய்கனி வணிகர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் திருச்சி மாவட்ட பொதுமக்கள் பயன் பெற்று வரும் காந்தி மார்க்கெட்டை தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தபடி சட்டசபையில் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்தின் புராதான சின்னமான காந்தி மார்க்கெட்டை இங்கேயே புணரமைத்து காந்தி மார்க்கெட் வணிகர்களுக்கே தரப்படும் என்று அறிக்கை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், காந்தி மார்க்கெட் வணிகர்களின் நிலையை கருத்தில் கொண்டு திருச்சி காந்தி மார்க்கெட் காய்கனி வணிகர்களுக்காக குரல் கொடுத்த திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் , கொடுத்த வாக்கை காப்பாற்றி கொடுத்த உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோருக்கு காந்தி மார்க்கெட் வணிகத்தை மட்டுமே நம்பி

வாழ்ந்து வரும் பல்லாயிரம் குடும்பங்களின் சார்பிலும் காந்தி மார்க்கெட் சுற்றி அமைந்துள்ள பலதரப்பட்ட வணிக பெருமக்களின் குடும்பங்களின் சார்பாகவும், திருச்சி மாவட்ட அனைத்து காய்கனி வணிகர்கள் ஒற்றுமை சங்கத்தின் சார்பாகவும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்டத்தின் சார்பாகவும் வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு நன்றி தெரிவித்துள்ளார். இதை அடுத்து திருச்சி காந்தி மார்க்கெட்டில் எஸ்.பி.பாபு தலைமையில் வியாபாரிகள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

error: Content is protected !!