இந்தியாவில் பல மாநிலங்களில் நீட் தேர்வில் தில்லுமுல்லுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி பலர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறி விட்டது.
அதற்கு மனு தாரர்கள் நீட் தேர்வில் 1 லட்சத்து 8 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளனர். அவர்களுக்கு மட்டும் மறு தேர்வு நடத்துங்கள். எல்லோருக்கும் மறு தேர்வு நடத்துங்கள் என்று கேட்கவில்லை என்று வாதிட்டனர்.
ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கப்பட்டுள்ளது என்று உறுதியாக தெரிந்தால் தான் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியும் . எனவே மறுதேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.