ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுகிறார். இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் விசேஷம் என்னவென்றால், கிழக்கு தொகுதிக்குட்பட்ட கட்சி நிர்வாகிகள், மக்கள் அவ்வளவாக கலந்து கொள்ளவில்லை. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மற்ற
தொகுதிகளில் இருந்து தான், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்த போது, கிழக்கு தொகுதியில் ஆட்களை ஏற்றிச்செல்ல வாகனங்களை அதிமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் ஆட்கள் யாரும் வராததால், வாகனங்கள் வெறுமையாக திரும்பி சென்றன. கூட்டத்துக்கு வந்த மற்ற தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கூட ரூ.500 முதல் ரூ.1,000 வரை கொடுத்து தான் அழைத்து வர முடிந்தது என்றனர். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தொகுதிக்குட்டபட்டவர்கள் அதிகளவில் கலந்து கொள்ளாததால் வேட்பாளர் தென்னரசு மற்றும் அதிமுக தலைவர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.