ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் பிப்ரவரி மாதம் 5ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் பொங்கல் தொகுப்பு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கில் மட்டும் 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ப்படாது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் பொங்கல் தொகுப்பு வழங்க அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது