மிக்ஜம் புயலின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு குறித்து , நடிகர் விஷால் சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பினார். ,“நான் அண்ணா நகரில் குடியிருக்கிறேன். எனது வீட்டிற்குள்ளேயே ஒருஅடி தண்ணீர் வருகிறது. அப்போது மற்ற இடங்களில் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள். 2015ல் இப்படி நடந்தது. எப்படியோ சமாளித்துவிட்டோம். ஆனால் 8 வருஷம் கழித்து அதைவிடவும் மோசமாக இருக்கும்போது கேள்விக்குறியாக இருக்கிறது” என விடியோ வெளியிட்டு மேயர் ப்ரியாவையும் குறிப்பிட்டு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
வெள்ளத்தில் ஒட்டுமொத்த சென்னை தத்தளிக்கும்போது நடிகர் விஷால் இதில் விளம்பரம் தேடலாம் என நினைத்து, என் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விட்டது என அதை வீடியோ எடுத்து வெளியிட்டு உள்ளார். 1 கோடி மக்களை பாதுகாக்கும், சென்னை மாநகராட்சிக்குள்ளேயே தண்ணீர் புகுந்து விட்ட நிலையில் ஒரு நடிகர் தன் வீட்டில் தண்ணீர் புகுந்து விட்டதை படம் பிடித்து போட்டு பப்ளிசிட்டி தேடி நினைத்ததை எண்ணி சென்னை மக்கள் கொதித்து போய் உள்ளனர்.
நடிகரின் பப்ளிசிட்டி கனவை சுக்குநூறாக உடைக்கும் வகையில் மேயர் ப்ரியா, நடிகர் விஷாலுக்கு சூடான பதில் அளித்து கூறியதாவது:
வெள்ளம் உங்க வீட்டுக்கு மட்டும் வரல. சென்னை முழுவதும் வெள்ளம் தான். 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 289 பேர் பலியானார்கள். 23.25 லட்சம் வீடுகள் நீரில் மூழ்கின. அப்படியான நிலையா இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது? 2015-ல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை எனப் பதிலளித்துள்ளார். அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் களத்தில் நின்று அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும், மாநகராட்சி ஊழியர்களும் செய்து வருகிறார்கள். அரசியல் செய்ய முயலாமல் கோரிக்கை ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவும். அரசு நிறைவேற்றித் தரும்!
மேயரின் இந்த பதிலால் விஷால் முனைமழுங்கி போய் வாயை பொத்திக்கொண்டு போ என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்.