திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் விஜயலட்சுமி. இவர் இங்கு பதவியேற்று 3 வருடங்கள் இருக்கும். இவரது காவல் நிலையத்தில் யாரையும் இவர் நம்பமாட்டார். எல்லாவற்றையும் இவரை நேரடியாக டீல் செய்யக்கூடியவர் என அங்கு பணியாற்றும் அனைவரும் சரமாரி புகார் கூறுகிறார்கள்.
இவர் கடந்த 6 மாதத்திற்கு முன் நாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டார். ஆனால் இவர் அங்கு செல்லவில்லை. திருவெறும்பூரில் இருந்தபடியே மாறுதல் உத்தரவை ரத்து செய்து பதவியை இங்கேயே தொடர்ந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் இவரை அரியலூருக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார் டிஐஜி.
அதையும் விஜயலட்சுமி கண்டுகொள்ளவில்லை. நகரமாட்டேன் என அடம்பிடித்து அரியலூர் மாறுதலையும் ரத்து செய்து விட்டு இங்கேயே பணியை தொடருகிறார். டிஐஜி போடும் உத்தரவை ஒரு இன்ஸ்பெக்டர் ரத்து செய்கிறார் என்றால், இவர் நகர்த்த முடியாத அளவுக்கு அவ்வளவு பலம் பொருந்தியவரா, இவருக்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கினார்கள். ஓ…… அவர் கொடுக்கும் தைரியமா? என தெரிந்து கொண்ட அதிகாரிகள் அப்படியே டிரான்ஸ்பர் விவகாரத்தை விட்டு விட்டனர்.