கேரள மாநிலத்தின் முதல் பாஜக மக்களவை எம்.பியாக வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ் கோபி. திருச்சூர் தொகுதியில் இவர் வெற்றி பெற்றார். வெற்றி குறித்து நடிகர் சுரேஷ்கோபி கூறியதாவது:
“மந்திரி பதவி வகிக்க எனக்கு விருப்பமில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு செய்யக்கூடிய பணிகள் அதிகம் உள்ளன. கேரள மக்களுக்கான திட்டத்தை நான் கொண்டு செல்லும்போது, சம்பந்தப்பட்ட மந்திரிகள் அதை செயல்படுத்த வேண்டும். அதையே நான் விரும்புகிறேன்.திருச்சூரில் வெற்றிபெற்றதால் எனது பணி இங்கு மட்டும் நின்றுவிடாது. அண்டை மாநிலமான தமிழகத்துக்கும் எம்.பி.யாக பணியாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.