மராட்டிய மாநிலத்தை சேர்ந்த நடிகை சதா 2002 ம் ஆண்டு ஜெயம் ரவி ஹீரோவாக அறிமுகமான ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தெலுங்கில் ஜெயம் ரவி நடித்த கதாபாத்திரத்தில் நித்தின் நடித்திருந்த நிலையில், கதாநாயகியாக சதா தான் நடித்திருந்தார். மேலும் முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதையும் பெற்றார்.
ஜெயம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி, போன்ற பல படங்களில் அஜீத், விக்ரம், ஜெயம் ரவி, மாதவன் என தமிழில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அடுத்தடுத்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வந்த சதா, திடீர் என பட தயாரிப்பிலும் களமிறங்கினார். தனியார் வங்கியில் கடன் வாங்கி கடந்த 2018 ம் ஆண்டு இவர், தயாரித்து நடித்திருந்த திரைப்படம் ‘டார்ச் லைட்’. இதில் ஒரு பாலியல் தொழிலாளியாக நடித்திருந்தார்.இந்தப்படம் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல் போனது.
சதாவுக்கு தற்போது 39 வயதாகிறது. சினிமாதுறையில் அவருக்கு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் எங்கு சென்றாலும் அவரது திருமணங்கள் குறித்த கேள்விகள் அதிகரித்துள்ளன. இதற்கு பதில் சொல்ல முடியாமல் தவித்து வருகிறார். திருமணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சதா கூறி இருப்பதாவது: திருமணம் செய்து கொண்டால் சுதந்திரத்தை இழக்கிறோம். திருமணம் செய்பவர் புரிந்து கொள்ளலாம் அல்லது புரியாமல் இருக்கலாம். நான் வனவிலங்குகளை விரும்புகிறேன். நான் விலங்குகளை நேசிக்கிறேன். நான் திருமணம் செய்து கொண்டால், என் ஆசைகளைத் தொடர முடியாமல் போகலாம். பல திருமணங்கள் வெற்றியடைவதில்லை. பலர் பிரிந்து செல்கின்றனர். அதனால் தான் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.