எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனுக்கு சொந்தமான எம்ஐடி கல்லூரிகள் முசிறியில் செயல்படுகின்றன. இங்கு கடந்த 2 தினங்களாக வருமானவரித்துறை சோதனைகள் நடக்கிறது. இது குறித்து இளங்கோவன் கூறும்போது, எனக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை எதுவும் நடைபெறவில்லை. எம்.ஐ.டி கல்லூரியில் கடந்த 3 நாட்களாக வருடாந்திர கணக்கு தணிக்கை நடைபெறுகிறது என்றார். கோவையில் உள்ள இளங்கோவனின் சம்பந்தி வீட்டிலும் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.