வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னைக்கு அருகே மேகத்திரள்கள் மிக மெதுவாக நகர்ந்து வருவதால் அதிகனமழை பெய்கிறது. வேலூர், திருப்பத்தூர் வடக்கு உள் மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
