தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இன்று காலை 9. 30 மணிக்கு கூடியது. சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுத்திருதனர். ஆனாலும் இன்று காலை சபாநாயகர் அப்பாவு தான் அவையை தொடங்கி நடத்தினார். கேள்வி நேரம் முடிந்ததும் நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போது சபாநாயகர் தனது இருக்கையில் அமர்ந்து இருந்தார். அவர் துணை சபாநாயகர் பிச்சாண்டியை அழைத்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நடத்தும்படி கேட்டுக்கொண்டார். பின்னர் அப்பாவு சபையில் இருந்து எழுந்து சென்றார். அதைத்தொடர்ந்து துணை சபாநாயகர் பிச்சாண்டி அவையை நடத்தினார். அப்போது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்து எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பேசினார்.
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோரும் ஆதரவு தெரிவித்தனர்.
எடப்பாடி பேசும்போது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது டிவிசன் வாக்ககெடுப்பு நடத்த வேண்டும் என்றார். சபாநாயகர் தங்கள் பேச அனுமதிப்பதில்லை., தங்கள் பேச்சை நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை, பெரும்பாலான நேரங்களில் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
அந்த தீர்மானத்தை எதிர்க்கட்சித்துணைத்தலைவர் உதயக்குமார் வழிமொழிந்தார்.
ஆனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்த்தனர்.
முதல்வர் ஸ்டாலின்: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது எங்களுக்கு செந்த சங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை. சபாநாயகர் மீது குறைகள் இருந்தால் எடுத்து சொல்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
சிந்தனைச்செல்வன்(விசிக): வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தலைவரை பெற்று இருக்கிறோம். காழ்ப்புணர்ச்சி காரணமாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து உள்ளனர்.
இந்திய கம்யூ. மாலி: நம்பிக்யைில்லா தீர்மானம் துரதிர்ஷ்டவசமானது
சதன் திருமலைக்குமார்(மதிமுக): தெற்கு சீமைக்கு கிடைத்த சீதனம் அப்பாவு
செல்வப்பெருந்தகை: அப்பாவு, ஆசிரியர், சிறந்த பண்பாவளர் . அதிமுகவினர் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்போம்.
அதைத்தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மக்கள் நம்பிக்கையை இழந்தவர்களால் இந்த தீர்மானம் கொண்டு வந்திருப்பதை பார்த்து மக்களே நகைப்பார்கள். பேரவைத் தலைவர் அப்பாவு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர். சபாநாயகர் கனிவானர், அதே நேரத்தில் கண்டிப்பானவர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அன்பும், பாசமும் கொண்டவர். அவர் தலைவர் பதவியை சிறப்பாக செய்து வருகிறார். எதிா்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபாநாயகரிடம் கண் ஜாடையாக கூட பேசியிருக்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.
உண்மைக்கு மாறான செய்திகள் தீர்மானத்தில் உள்ளதால் பேரவை தலைவரின் நடுநிலையை சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. பேரவையில் அமளில் ஈடுபடுகிறவர்களை அமைதிப்படுத்துவார். வெளியேற்ற விரும்பமாட்டார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானததின் மீது எதிர்க்கட்சித்தலைவர் 1 மணி நேரம் 52 நிமிடம் பேசினார். அதிமுகவின் உள்கட்சி பிரச்னையை திசைதிருப்ப இந்த நம்பிக்கை இல்லா தீர்மானமா? கடந்த கால சம்பவங்களுக்கும், நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கும் என்ன சம்பந்தம்? அவர் யாருடைய தலையீடும் இன்றி சபையை நடத்துகிறார் . அதிமுக ஆட்சியில் எத்தனை விதிமீறல்கள் நடந்தது அதை நினைத்தாலே நெஞ்சம் சுடுகிறது. அப்பாவு இந்த அவையில் உறுப்பினராக இருந்த காலத்தில் இருந்தே அவரது பண்புகளை நான் அறிவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதைத்தொடர்ந்து தீர்மானத்தின் மீது டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது. உறுப்பினர்கள் தங்கள் இருக்கயைில் இருந்தவாறே எண்ணி கழிக்கும் முறையில் ஒவ்வொரு உறுப்பினர்களின் பெயர்கள் படிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பேரவையின் அனைத்து வாசல்களும் மூடப்பட்டது. எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் தோல்வி அடைந்ததாக துணை சபாநாயகர் பிச்சாண்டி அறிவித்தார்.
இந்த வாக்கெடுப்பில் பாமக பங்கேற்கவில்லை.