Skip to content
Home » டோனியை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்…. யுவராஜ் சிங்கின் தந்தை சீறுகிறார்

டோனியை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்…. யுவராஜ் சிங்கின் தந்தை சீறுகிறார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்.  டோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 உலகக்கோப்பைகளை வெல்வதற்கு  யுவராஜ் சிங் பங்கு முக்கியமானது.  . குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 28 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல  யுவராஜ் சிங்கின் பங்களிப்பு  முக்கியமானது. 2007 உலக கோப்பை போட்டியில் தான் யுராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை புரிந்தார். அத்துடன் 12 பந்துகளில் 50 ரன்களையும் சேர்த்தார்.

ஆனால் யுவராஜ் சிங்குக்கும்,   கூல் கேப்டன் என்று  பாராட்டப்படும் டோனிக்கும்  எப்போதும்  ஒரு வகையான மவுன யுத்தம் நடந்துகொண்டு இருந்ததாகவே  கூறப்படுகிறது. இதுபற்றி அவர்கள் எப்போதும் வாய்திறந்ததில்லை. ஆனால் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங்(முன்னாள் கிரிக்கெட் வீரர்) சமயம் கிடைக்கும்போதெல்லாம் டோனியை ஒரு பிடி பிடித்து விடுகிறார். தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை ஒழித்தவர் டோனி என்று அவர் பலமுறை குற்றம் சாட்டி உள்ளார். இதற்கு காரணம் 2007 உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்குக்கு கிடைக்க வேண்டிய கேப்டன் பதவியை , டெண்டுல்கர் உதவியுடன் டோனி பறித்துக்கொண்டார் என யோக்ராஜ் சிங் குற்றம் சாட்டி  வருகிறார்.

இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்னரும்  யோக்ராஜ் சிங் கூறியதாவது;

எம்.எஸ். டோனியை நான் மன்னிக்க மாட்டேன். அவர் தனது முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். பெரிய கிரிக்கெட்டரான அவர் எனது மகனுக்கு எதிராக செய்த விஷயங்கள் தற்போது வெளிவருகிறது. என்னுடைய வாழ்வில் அவரை எப்போதும் நான் மன்னிக்க மாட்டேன். என்னுடைய வாழ்வில் 2 விஷயங்களை செய்ததில்லை. ஒன்று எனக்கு தீங்கிழைத்தவர்களை எப்போதும் நான் மன்னித்ததில்லை. இரண்டு அவர்கள் எனது குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் எனது வாழ்நாளில் எப்போதும் அவர்களை மறக்க மாட்டேன்.

டோனி இன்னும் 5 – 6 வருடங்கள் விளையாடியிருக்க வேண்டிய எனது மகனின் வாழ்க்கையை அழித்து விட்டார். சேவாக், கம்பீர் போன்றவர்கள் கூட மற்றொரு யுவராஜ் சிங் பிறக்க முடியாது என்று கூறியிருந்தனர். புற்றுநோயுடன் நாட்டுக்காக விளையாடி உலகக்கோப்பையை வென்று கொடுத்த அவருக்கு இந்தியா பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்”.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!