நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என அந்த மாநில முதல்வர் மம்தா அறிவித்து உள்ளார். அதுபோல தற்போது பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மானும், காங்கிரசுடன் கூட்டணி இல்லை என அறிவித்து உள்ளார். பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது.
